அனாதையான கல்முனை மாநகரசபையும் ,தேவைக்கு வரும் அரசியல் வியாபாரிகளும்
அமைச்சர் ஹக்கீமின் அண்மைய போக்குகள்... நான் சொல்ல வேண்டியுள்ள சில செய்திகள்! ---------------------------------------------------------------------------- ஏ.எச்.சித்தீக் காரியப்பர் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை நகரம் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் தான் பேசியிருப்பதாகவும் அண்மையில் அம்பாறைக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். பிரதமர் ரணில் இவ்வாறு கூறியிருப்பது ஒரு புறத்தில் நல்லதாக இருந்தாலும் மறுபுறத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிகள்தான் என்ன என்ற கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை. சகல அதிகாரங்களையும் கொண்ட நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புத்துறை அமைச்சரான ரவூப் ஹக்கீம், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை நகரத்தை அபிவிருத்தி செய்ய சுயமாக முயற்சிக்கவில்லையா என்றதொரு நியாயமான சந்தேககம் என்னுள் எழுந்துள்ளது. கல்முனையை அபிவிருத்தி செய்ய பிரதமரே விருப்பம் கொண்டு அமைசச்ர் ஹக்கீமுடன் பேச வேண்டிய நிலை ஏற்பட்டதான் காரணமாகவே இந்தக் கேள்வி என்னுள் எழுந்துள்ள...