முஸ்லிம் காங்கிரசிலும்,வில்பத்துவிலும் அமைச்சர் றிஷாத்தின் உண்மை முகம்
அண்மையில் கிளறி விடப்பட்டு முஸ்லிம்களிற்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ள வில்பத்து விவக ாரத்தினைக் கையாளும் விடயத்தில் அமைச்சர் றிஸாத் அதீத கரிசனை காட்டி வருவது யாவரும் அறிந்ததே.இதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களிற்கு நிகராக அமைச்சர் றிஸாத் வர்ணிக்கப்படும் நிலையும் தோன்றியுள்ளது.மர்ஹூம் அஸ்ரபினை எதிர்த்தவர் எனக் கூறி முஸ்லிம்களிடத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற காரணத்தினால் இவரும் தான் ஏதோ அஸ்ரபின் பாசறையில் பயிற்று விக்கப்பட்டு மு.காவின் தற்போதைய தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மு.காவினை விட்டும் விலகிச் சென்ற ஒருவர் போல தன்னை பல இடங்களில் கூறியும் வருகிறார்.( அண்மையில் ஒரு பத்திரிகை நேர்காணலில் அவ்வாறே கூறி இருந்தார் )எனவே, 1. வில்பத்து விவகாரத்தில் அன்றும்,இன்றும் அமைச்சர் றிஸாத்தின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது? 2. மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் வாழ்ந்தகாலத்திலும்,அவர் மரணித்த பின்னரும் மு.காவுடன் அமைச்சர் றிஸாத்தின் உறவு எவ்வாறு இருந்தது? என்ற வரலாற்றினை சமூகத்திற்கு நினைவூட்ட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. . வில்பத்து பிரச்சினை இன்று நே...