சாய்ந்தமருது தொடர்பில் ஹரீஸின் வினாக்களுக்கு விடை தருவாரா ரிஷாட்

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயம் தொடர்பாக அமைச்சர் ரிஷாட் இதுவரை எங்காவது பேசியிருக்கின்ராரா? அல்லது இனிவரும் காலங்களிலாவது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத் தருவேன் என்று சொல்வாரா? நான் நினைக்கவில்லை, ஏனென்றால் சாய்ந்தமருதுக்கு அத்தனை துரோகங்களை இளைத்த வை.எல்.எஸ்.ஹமீத் அவர்களது பலமான பிடியில் அமைச்சர் ரிசாட் இருந்துகொண்டிருக்கிறார். சாய்ந்தமருது மக்கள் மயில் சின்னத்துக்கு வழங்கும் வாக்குகளால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லப்போவது
இதே வை.எல்.எஸ்.ஹமீட் என்பதே உண்மை.
முடியுமானால் ஒரு தேசியப் பட்டியல்தான் கிடைத்தாலும் அதை மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கு வழங்குவேன் என்று அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனால் கூறமுடியுமா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியில் முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான எச்.எம்.எம். ஹரீஸ் கேள்விஎழுப்பினார்.

இன்று (24) இரவு சாய்ந்தமருது சீ பிரீஸ் உணவகத்தில் தொழிலதிபர் ஹக்கீம் ஷரீப் தலைமையில் இடம்பெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ், முன்னைநாள் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பாயிஸ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஆற்றிய உரையின் ஒரு பகுதி கீழே ஒலிப்பதிவாகத் தரப்படுகின்றது.

நாளை (25) சனிக்கிழமை அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Sarjoon Lafeer 

Comments

Popular posts from this blog

தென் கிழக்கு சமூக நல அமைப்பு ( ‪#‎SEWA‬ ) நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவும் வகையில் பொருட்கள் கையளிப்பு