Posts

Showing posts from May, 2016

தென் கிழக்கு சமூக நல அமைப்பு ( ‪#‎SEWA‬ ) நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவும் வகையில் பொருட்கள் கையளிப்பு

Image
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே . ************************************ தென்கிழக்கு வாழ் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு தங்களாலான அனைத்து உதவிகளையும் கடந்த மூன்றாண்டுகளாக செய்து வந்த எமது தென் கிழக்கு சமூக நல அமைப்பு (  ‪#‎ SEWA‬  ) நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவும் வகையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உடனடித் தேவையாக இருந்த 197,600/- ( ஒரு லட்சத்து தொண்ணூற்றி ஏழாயிரத்து அறுநூறு ரூபா ) பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா வின் ( ACJU ) தலைமையகத்தில் நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலைய குழுவினரிடம் ( RCC - Relief Coordinating Centre ) கடந்த 23ம் திகதி திங்கள் மாலை உடன் கொள்வனவு செய்து நேரடியாக கையளித்திருந்தோம் . அல்ஹம்துலில்லாஹ். இதில் முதற்கட்டமாக கல்முனை முஹியுத்தின் ஜும் - ஆ பள்ளிவாசல் தலைமையில் இடம்பெற்ற வெள்ள நிவாரண நிதி சேகரிப்பிட்காக கடந்த 22/05/2016 ஞாயிறு றன்று 17,000/- ( பதினேழாயிரம் ரூபா ) பணமாக இரு பள்ளிவாசல்களுக்கு அவர்களது நிர்வாகத்திடம...