தென் கிழக்கு சமூக நல அமைப்பு ( ‪#‎SEWA‬ ) நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவும் வகையில் பொருட்கள் கையளிப்பு

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே .
************************************
தென்கிழக்கு வாழ் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு தங்களாலான அனைத்து உதவிகளையும் கடந்த மூன்றாண்டுகளாக செய்து வந்த எமது தென் கிழக்கு சமூக நல அமைப்பு ( ‪#‎SEWA‬ ) நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவும் வகையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உடனடித் தேவையாக இருந்த 197,600/- ( ஒரு லட்சத்து தொண்ணூற்றி ஏழாயிரத்து அறுநூறு ரூபா ) பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா வின் ( ACJU ) தலைமையகத்தில் நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலைய குழுவினரிடம் ( RCC - Relief Coordinating Centre ) கடந்த 23ம் திகதி திங்கள் மாலை உடன் கொள்வனவு செய்து நேரடியாக கையளித்திருந்தோம் . அல்ஹம்துலில்லாஹ்.
இதில் முதற்கட்டமாக கல்முனை முஹியுத்தின் ஜும் - ஆ பள்ளிவாசல் தலைமையில் இடம்பெற்ற வெள்ள நிவாரண நிதி சேகரிப்பிட்காக கடந்த 22/05/2016 ஞாயிறு றன்று 17,000/- ( பதினேழாயிரம் ரூபா ) பணமாக இரு பள்ளிவாசல்களுக்கு அவர்களது நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. மொத்தமாக
( 197,600 +17,000 + 700 = 215,300 /- )




வறிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் மூவரை மாத்திரம் கொண்டு உருவாகி அவர்களின் கூட்டு பொருளாதார பங்களிப்புடன் எம்மால் உதவி பெறும் வறிய மக்களின் சுய கௌரவத்தையும் பேணும் வகையில் இரகசியமாக பணிகளை முன்னெடுத்த போதிலும் இவ்வாறான அனர்த்த்தங்களின் போது கள நிலையறிந்து எமது பிரதேச மக்களின் ஆதரவுகளையும் பெற்று மக்களுக்கு உடன் தேவையானவற்றை களப்பணிகளில் நேரடியாக ஈடுபட்டு வழங்கும் நோக்குடன் எமது சேவா அமைப்பின் குழுவினரால் ஒதுக்கப்பட்டிருந்த ரூபா 150,000/- உடன் இம்முறை மேலும் சில சகோதரர்களினால் எமது அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரூபா 71,200/- உம் சேர்த்து மொத்தமாக 221,200/- இந் நிவாரணப் பணிக்காக செயற்ப்படுத்தப்பட்டது .
குறிப்பு : எமது அமைப்பினால் பயன்பெறும் எந்தவொரு குடும்பத்தினதும் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அவர்களது சுயகௌரவம் கருதி பகிரங்கப்படுத்தப் படமாட்டாது .
இலாப நோக்கமற்ற செயற்பாட்டு ரீதியில் இயங்கும் இந்த அமைப்பில் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு இறை திருப்தியை நோக்காக கொண்ட ஆர்வமுள்ளோரை மாத்திரம் இணைத்துக் கொண்டு உத்தியோகபூர்மாக எமது அமைப்பை பதிவு செய்து பணிகளைத் தொடர இருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ்.





Comments

Popular posts from this blog

இஸ்லாத்தை ஆய்வு செய்து ஏற்றுக்கொண்ட கனடா மாணவி....!!

Kalmunai Famous Mosque