கடல் கடந்து வாழும் நண்பர்களுக்காக...
கடல் கடந்து வாழும் நண்பர்களுக்காக...
நாங்கள் முதல்முறை விமான பயணம்..
மீண்டும் எப்போது நாடு திரும்புவோம் என்று !!
ஆகாய பயணம் கடல் கடந்து...
அயல் நாட்டு மண்ணில் கால் வைத்தோம்...
எங்கள் பாசமும் பந்தமும் குறையவில்லை..
பழகிய நட்புகளை மறக்கவில்லை..
உரிமையோடு சண்டை போட இங்கு உறவுகள் இல்லை.
அன்பு காட்டி அரவணைக்க ஆசான் இல்லை...
அதிகாலை வெகுநேரம் உறங்கினேன் தாய் நாட்டில்..
நிம்மதியாக உறங்க முடியவில்லை அயல் நாட்டில்..
பிரிவுகள் சுமையான போதும்..
கடமைகள் கண்ணீரை மறைத்து விட்டது...
.
தேசம் விட்டு நாங்கள் வந்தாலும் என் தேசிய கொடியை கண்டால் முகத்தில் ஒரு மகிழ்ச்சி !!!
நாளிதழ்களை நாட்டில் காணாத நாங்கள் செய்திகளை மட்டுமே காண்கிறோம் தொலைகாட்சியில்...
தங்கையின் திருமணம் கைபேசியில் வாழ்த்திவிட்டு உள்ளுக்குள் அழும் மனம்...
உறவுகளில் யாரேனும் இறந்துவிட்டால் இரண்டு சொட்டு கண்ணீர் விட கூட நேரமில்லை...
மாதத்தில் ஒருமுறை நண்பனோடு பேசினாலும்
மச்சான்,பங்காளி எங்கள் வீட்டில் உள்ளவங்கள
பாத்துகோங்கடா என்றும்....
சித்தப்பா நான் ஸ்கூல் போறேன் நீங்க எபோ வருவிங்க கேட்கும் அண்ணன் குழந்தைகளும்...
மாமா எனக்கு சாக்லேட் வாங்கிட்டு வாங்க
வருவது எப்போதேன தெரியாமல்...
வந்துடுறேன் செல்ல குட்டியென பதில் கூறுவதும்
வலியிலும் சுகமான சுமைதான் நாங்கள் சுமப்பது...
தேசம் விட்டு வந்தாலும் குறைந்ததில்லை எங்கள் பாசம் மட்டும் காலம் வரும் வரை காத்திருக்கிறோம்
தாயகம் வந்து சேர....
Comments
Post a Comment