ஜனாஸா அறிவித்தல்: நாகூர் ஈ.எம் ஹனீபா காலமானார்


மௌத்தையே நீ மறந்து வாழலாகுமா’ எனப் பாடினாய்
மௌத்தாகியும் நீ எங்களுக்குள் வாழ்கிறாய்

உனது கீதமில்லாத வெள்ளிக்கிழமை
எங்களுக்கெல்லாம் வெறும் கிழமையாகின.
பிரபல இஸ்லாமிய பாடகரும், திராவிட கொள்கையில் ஈடுபாடு கொண்டவருமான நாகூர் ஹனீபா இன்று (08) சென்னையில் காலமானார்.சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த இவர், சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
இஸ்லாமிய பாடல்களை உலகெங்கும் ஒலிக்கச் செய்து தனது குரலால் பலரது இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் பாடிய இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் மதங்களை தாண்டி அனைவரையும் கவர்ந்த பாடல்.
திமுகவில் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து மிகுந்த ஈடுபாடு கொண்டு, அக்கட்சியின் வளர்ச்சிக்கு தனது பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். திமுக தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

Comments

Popular posts from this blog

தென் கிழக்கு சமூக நல அமைப்பு ( ‪#‎SEWA‬ ) நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவும் வகையில் பொருட்கள் கையளிப்பு