ஷஃபான் மாதத்தை பாலாக்கும் பராத் இரவும் பித்அத் சடங்குகளும். (சாபித் ஷரயி)
ஷஃபான் மாதத்தை பாலாக்கும் பராத் இரவும் பித்அத் சடங்குகளும். (சாபித் ஷரயி) ...................................................................... இஸ்லாம் ஆதாரபூர்வமாக அடையாளப்படுத்தும் தினங்ளை சிறப்பிப்பது நம் சுன்னாவாகும் உதாரணமாக முஹர்ரம் 09,10, அரபா 09ம் தினம், திங்கள் வியாழன் சுன்னத்தான நோன்பு, நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள்..... இப்படி பல தினங்கள் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் மூலம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அது போன்றே நாம் இருந்துகொண்டிருக்கும் ஷஃபான் மாதம் குறித்து வரக்கூடிய ஹதீஸ்களை எடுத்து நோக்கினால் புஹாரி முஸ்லிம் உட்பட பல கிரந்தங்களில் இம்மாதமானது நபிகளார் ரமழான் மாதத்திற்க்கு அடுத்த படியாக அதிகமாக நோன்பு நோற்ற மாதமாகவும், ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சென்ற ரமழானில் தவரவிடப்பட்ட நோன்புகளை கழாச்செய்யும் மாதமாகவும், அதிகமாக அமல்களில் ஈடுபட்டு எதிர்நோக்கவிருக்கும் ரமழானுக்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் மாதமாகவுமே திகழ்ந்துள்ளது. அதுவல்லாமல் லய்லதுல் கத்ர் இரவு போன்று ஷஃபான் மாதத்தின் 15ம் நாள் பராத் இரவு என்று வாசகங்களுடன் இடம் பெறும் எந்த குர்ஆன் வசனத்தையும் ஹதீஸ...