ஷஃபான் மாதத்தை பாலாக்கும் பராத் இரவும் பித்அத் சடங்குகளும். (சாபித் ஷரயி)

ஷஃபான் மாதத்தை பாலாக்கும் பராத் இரவும் பித்அத் சடங்குகளும். (சாபித் ஷரயி) ...................................................................... இஸ்லாம் ஆதாரபூர்வமாக அடையாளப்படுத்தும் தினங்ளை சிறப்பிப்பது நம் சுன்னாவாகும் உதாரணமாக முஹர்ரம் 09,10, அரபா 09ம் தினம், திங்கள் வியாழன் சுன்னத்தான நோன்பு, நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள்..... இப்படி பல தினங்கள் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் மூலம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அது போன்றே நாம் இருந்துகொண்டிருக்கும் ஷஃபான் மாதம் குறித்து வரக்கூடிய ஹதீஸ்களை எடுத்து நோக்கினால் புஹாரி முஸ்லிம் உட்பட பல கிரந்தங்களில் இம்மாதமானது நபிகளார் ரமழான் மாதத்திற்க்கு அடுத்த படியாக அதிகமாக நோன்பு நோற்ற மாதமாகவும், ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சென்ற ரமழானில் தவரவிடப்பட்ட நோன்புகளை கழாச்செய்யும் மாதமாகவும், அதிகமாக அமல்களில் ஈடுபட்டு எதிர்நோக்கவிருக்கும் ரமழானுக்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் மாதமாகவுமே திகழ்ந்துள்ளது. அதுவல்லாமல் லய்லதுல் கத்ர் இரவு போன்று ஷஃபான் மாதத்தின் 15ம் நாள் பராத் இரவு என்று வாசகங்களுடன் இடம் பெறும் எந்த குர்ஆன் வசனத்தையும் ஹதீஸ்களையும் காணமுடியாது. மாறாக ஷஃபானின் 15ம் இரவு அல்லாஹ் அடிவானத்திற்க்கு இறங்குகிறான் என்றும், கல்புகூட்டதாரின் ஆடுகளின் உரோமமளவிற்க்கு நரவாசிகளுக்கு விடுதலை வழங்குகிறான் என்றும், அந்நாளில் பகல் முழுக்க நோன்பு வையுங்கள் இரவு முழுக்க இபாதத்தில் ஈடுபடுங்கள் என்றும் பல ஹதீஸ்கள் இப்னுமாஜா, பய்ஹகி, திர்மதி, மிஸ்காத், ஸுஃபுல் ஈமான், தாரகுத்னி போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. இந்த அனைத்து ஹதீஸ்களையும் ஆய்வுக்குட்படுத்தினால் அனைத்துமே பலஹீனமான அறிவிப்பாளர் வரிசைகளைக் கொண்ட ஹதீஸ்களாகும். அதில் இடம் பெறும் அறிவிப்பாளர்களை ஹதீஸ்களை இமாம்களான அபூஜஹ்பர் அல் உகைலி, அபூஹாதம், அல்பானி, அஹ்மத் இப்னு அப்தில்லாஹ் அல் இஜ்லி, இன்னும் அந்த ஹதீஸ் கிரந்தங்களுக்கு தஹ்கீக் எழுதிய பல இமாம்கள் அவ் அறிவிப்பாளர்கள் முதல்லிஸ்கள் என்றும், முர்ஸில்கள் என்றும் பல குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக நிறுவி இந்த ஹதீஸ்கள் அனைத்தும் பலயீனமானவைகள் என நிறூபித்துள்ளனர். எனவே இந்த பராத் இரவு என்பது நபிகளாரோ எந்த ஸஹாபாக்களோ அனுஸ்டித்த இரவு கிடையாது. பின் வந்தோரால் ஷீஆக்களால் திட்டமிடப்பட்டு பித்அத்ஆக நுழைவிக்கப்பட்ட இரவாகும்... இதை அறியாத எமது சமூகம் நன்மையென நினைத்து அன்றைய நாளை பாவத்தில் ஈடுபடும் நாளாக அமைத்துக் கொள்கின்றனர் எனவே இந்த பித்அத்தைவிட்டும் தவிர்ந்து எதிர்வரும் ரமழானிற்க்காக எம்மை நாம் தயார்படுத்துவோம்....

Comments

Popular posts from this blog

இஸ்லாத்தை ஆய்வு செய்து ஏற்றுக்கொண்ட கனடா மாணவி....!!

Kalmunai Famous Mosque