தென் கிழக்கு சமூக நல அமைப்பு (Sewa) வறிய மக்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு உதவிகள்

அல்ஹம்துலில்லாஹ் !!
புகழனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே .
எமது தென் கிழக்கு சமூக நல அமைப்பு (Sewa) அமைப்பினால் புனித ரமழானை முன்னிட்டு எம் பிரதேசத்தில் வாழும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி ரமழான் ஆரம்பமாக முன்னர் அந்த ஏழை மக்களின் கைகளை சென்றடையக்கூடியவாறு கடந்த 17/06/2015 மற்றும் 18/06/2015 ஆகிய தினங்களில் விநியோகிக்கப்பட்டது.
இதில் முதல் கட்டமாக இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களுக்கான ஒரு மாதத்திற்கு முழுவதும் தேவையான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி கடந்த 17ம் திகதியும் மேலும் 40 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 18ம் திகதியும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்விநியோகத்திற்காக கல்முனை , சாய்ந்தமருது , மாளிகைக்காடு , மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய பிரதேசங்களில் வாழும் மிகவும் வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டிருந்தது .
இவ் விநியோகத்தினை சிறப்பாக செய்து முடித்த எமது குழுவுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு எமது இந்த வெற்றிகரமான திட்டத்துக்கான பண உதவிகளை வழங்கிய அனுசரனையாளர்களுக்கு நன்றிகளையும் அவர்களது பொருளாதாரத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் மென்மேலும் விருத்தியடையச் செய்வானாக என பிரார்த்திக்கிறோம் .
ஆமீன் !!

















Comments

Popular posts from this blog

இஸ்லாத்தை ஆய்வு செய்து ஏற்றுக்கொண்ட கனடா மாணவி....!!

Kalmunai Famous Mosque